ரூ.2 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகள்

சித்தையன்கோட்டை பேரூராட்சியில் ரூ.2கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2022-08-18 17:53 GMT

சித்தையன்கோட்டை பேரூராட்சி பகுதியில் ரூ.2 கோடி மதிப்பிலான பூங்கா, பாலம், தார்சாலை ஆகியவை திறப்பு விழா நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு சித்தையன்கோட்டை பேரூராட்சி புதுத்தெரு எஸ்.ஏ.கே. நகர் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காவை திறந்து வைத்தார். மேலும் ஆலமரத்து வாய்க்கால் முதல் கோம்பை வரை ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பிலான தார்சாலை, புதிய பாலம், வாய்க்கால் ஆகிய முடிவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் இ.பெரியசாமி பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் காந்திநாதன், மண்டல துணை இயக்குனர் (பேரூராட்சிகள்) மனோரஞ்சிதம், சித்தையன்கோட்டை பேரூராட்சி தலைவர் பொதும்பொண்ணு முரளி, துணைத்தலைவர் ஜாகீர் உசேன், செயல் அலுவலர் சிவக்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்