தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு- இருவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-15 09:07 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில் பத்து கிராமத்தில் விஏஓ -ஆக இருந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் அந்த கிராமத்தில் மணல் கொள்ளையை மிகத் தீவிரமாக தடுத்துவந்தார்.

இவர் கடந்த ஏப்ரல் 25 -ஆம் தேதி வழக்கம் போல் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர் லூர்து பிரான்சிஸ்ஸை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பின்னர், இந்த கொலையில் ஈடுபட்டதாக ராமசுப்பு, மாரிமுத்து என்பவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் கண்காணிப்பின் கீழ் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.

தற்போது, இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் குற்றவாளிகள் இருவருக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்