பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு
பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை,
பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வானதி சீனிவாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.