வேன் மோதி மெக்கானிக் பலி

திண்டிவனம் அருகே வேன் மோதி மெக்கானிக் பலி;

Update:2022-06-27 22:55 IST

திண்டிவனம்

செஞ்சியை அடுத்த பெரிய அகரம் பகுதியைச் சேர்ந்தவர் காத்தவராயன் மகன் வசந்தராஜா(வயது 36). கம்ப்யூட்டர் மெக்கானிக்கான இவர் மோட்டார் சைக்கிளில் புதுச்சேரிக்கு சென்று கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை வாங்கிக்கொண்டு மீண்டும் சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே தீவனூர் மெயின் ரோட்டில் வந்தபோது எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வசந்தராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ரோஷனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்