வேன்-கார் மோதல்; 10 பேர் காயம்

வேன்-கார் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனா்.

Update: 2023-09-10 22:10 GMT

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடியில் இருந்து ஒரு வேன் கோபிக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. இதில் 5 பேர் இருந்தனர். ரங்கன்காட்டூர் காலனி அருகே சென்றபோது கோபியில் இருந்து கவுந்தப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த காரும், வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வேன் மற்றும் காரில் இருந்த 10 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்