வால்பாறை உண்டு உறைவிடப்பள்ளியில் ஓவியப்போட்டி
வன உயிரின வார விழாவையொட்டி வால்பாறை உண்டு உறைவிடப்பள்ளியில் ஓவியப்போட்டி நடந்தது.
வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் வன உயிரின வார விழா ஒவிய போட்டி மலைவாழ் கிராம மக்களின் பிள்ளைகள் படிக்கும் உண்டு உறைவிடப் பள்ளியில் நடத்தப்பட்டது. அதன்படி வனத்தையும், வனவிலங்குகளையும் மற்றும் இயற்கையையும் பாதுகாப்பது நமது கடமை என்பதை உணர்த்தும் வகையில் வன உயிரின வார விழா ஒவிய போட்டி நடத்தப்பட்டது. இயற்கையை பாதுகாப்பது, வனவிலங்குகளை பாதுகாப்பது, வனவிலங்குகளை பாதுகாப்பது போன்ற பல்வேறு அம்சங்களை கொண்ட ஒவியங்களை மாணவ- மாணவிகள் வரைந்தனர்.க ுறிப்பாக மாணவர் ஒருவர் புலி தனது குட்டியை தடவி கொடுப்பதை போன்ற ஒவியத்தை வரைந்திருந்தார். அதே போல் வால்பாறை வனப் பகுதிகள் பல்லுயிர் வாழும் வனப் பகுதி என்பதை குறிக்கும் வகையில் ஒரே ஒவியத்தில் வனங்கள், அனைத்து விலங்குகள் உள்ளதைப் போல வரைந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. ஓவிய போட்டியில் வரையப்பட்ட ஓவியங்கள் மண்டல அளவில் அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெரும் ஒவியங்களை மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க செய்து பின்னர் பரிசுகள் வழங்கப்படும் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.