பல்லடம்
பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோவிலில், கூப்பிடு பிள்ளையார் கலை வள்ளி கும்மி ஆட்டம் குழுவின் 5-வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடைகளை அணிந்து சிறுமிகள், பெண்கள் ஆடிய வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கும்மியாட்ட ஆசிரியர்கள் பெரியசாமி, கலையரசி, முருகன் -வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்களும் பாடி கும்மி ஆட்ட குழுவினரை உற்சாகப்படுத்தினர்.ஏராளமான பொதுமக்கள் கும்மி ஆட்டத்தை கண்டு களித்தனர்.முன்னதாக 50-க்கும் மேற்பட்ட தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்து கூப்பிடு பிள்ளையார் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.