வள்ளலாரின் 200-வது அவதார ஆண்டு முப்பெரும் விழா
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மயிலாடுதுறையில் இன்று வள்ளலாரின் 200-வது அவதார ஆண்டு முப்பெரும் விழா நடந்தது
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2022-2023 சட்டசபை இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமானார் தர்மசாலை தொடங்கிய 156-வது ஆண்டு தொடக்க விழா, அவர் பிறந்த 200-வது ஆண்டு தொடக்க விழா, ஜோதி தரிசனம் தந்த 152-வது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் 52 வாரங்கள் கொண்டாடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி மயிலாடுதுறை மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை சார்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் விழா நடக்கிறது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.