வாஜ்பாய் பிறந்த நாள் விழா

வாஜ்பாய் பிறந்த நாள் விழா நடந்தது.

Update: 2022-12-25 21:34 GMT

திசையன்விளை:

திசையன்விளையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பா.ஜனதா நெல்லை தெற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ஆறு செந்தில் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்சாமி முன்னிலை வகித்தார். அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த வாஜ்பாய் படத்திற்கு ராதாபுரம் வடக்கு மண்டல பார்வையாளர் சேகர், நகர பா.ஜனதா முன்னாள் செயலாளர்கள் தர்மராஜ், ராதாகிருஷ்ணன், நெசவாளர் பிரிவு மாவட்ட முன்னாள் செயலாளர் சதாசிவம், நகர முன்னாள் துணைத்தலைவர் சந்தனகுமார், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சண்முகவேல் மணிகண்டன், கோபால் நாடார் உள்பட பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்