நெல்லையில் உயிரிழந்த கார் டிரைவர் உடலுக்கு வைகோ அஞ்சலி
நெல்லையில் உயிரிழந்த கார் டிரைவர் உடலுக்கு வைகோ அஞ்சலி செலுத்தினார்.
பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவர் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எம்.பி.யின் கார் டிரைவராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் இட்டேரி பகுதியில் சின்னத்துரை மயங்கி விழுந்து இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்ததும் நேற்று மதியம் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது வைகோ நேரில் வந்து சின்னத்துரை உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் தி.மு.க.வை சேர்ந்த அப்துல் வகாப் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலைக்குமார், பூமிநாதன், ரகுராமன், மாநில துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், நெல்லை மத்திய மாவட்ட ம.தி.மு.க செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.