பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா

சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடந்தது.

Update: 2023-06-02 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு எஜமான சங்கல்ப பூஜை, விநாயகர் பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவிலில் இருந்து பால் காவடி எடுத்து, நகரில் உள்ள பக்தர்களிடம் பால் பெற்றுக்கொண்டு, பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை செய்து பாலாபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், புளியோதரை, பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் மாலையில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி, குமாரபுரம், காந்திரோடு, 7-ம் திருநாள் மண்டகப்படி சந்திப்பு மற்றும் ரதவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து இரவில் அர்த்த சாம பூஜை நடைபெற்றது. இதில் சிவகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்