சொக்கலிங்க சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்

புளியங்குடி சிந்தாமணி சொக்கலிங்க சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது.

Update: 2023-06-02 18:45 GMT

புளியங்குடி:

புளியங்குடி சிந்தாமணி சொக்கலிங்க சுவாமி கோவிலில் வைகாசி பிரமோற்சவ திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சுவாமி வீதிஉலா ஆகியவை நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளியதை தொடர்ந்து, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன், நகர்மன்ற துணைத்தலைவர் அந்தோணிசாமி, கோவில் செயல் அலுவலர் ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள், அனைத்து சமுதாய நாட்டாமைகள், சஷ்டி பிரதோஷ கமிட்டி நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்