கருப்பண்ணசாமி கோவிலில் வைகாசி திருவிழா
வேதாரண்யம் அருகே குரவப்புலத்தில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே குரவப்புலத்தில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் சாமிக்கு பால், தயிர் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்