வைத்தியலிங்க சுவாமி கோவில் தேரோட்டம்

ஆலடிப்பட்டி வைத்தியலிங்க சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-08-28 19:00 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி வைத்தியலிங்க சுவாமி - அன்னை யோகாம்பிகை கோவில் ஆவணித் திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா, அபிஷேம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் நாளான நேற்று நடைபெற்றது. இதைமுன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ேதரில் சுவாமி எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். சிறிய தேரில் அம்பாள் எழுந்தருளினார். சிறிய தேரை பெண்கள் மட்டும் இழுத்துச் சென்றனர்.

தேரோட்ட நிகழ்ச்சியில் ஆலங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சுப்பிரமணிய உமாபதி மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்