கோவில் திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு
கோவில் திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.;
தொண்டி
திருவாடானை தாலுகா மாவிலங்கை கிராமத்தில் ஸ்ரீநல்லமுத்து ஈஸ்வரர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி சாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை அடக்கினர்.