தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
ஜோலார்பேட்டையில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஜோலார்பேட்டை வட்டாரத்திற்குட்பட்ட பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகர் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் மருந்து தடுப்பு துறை சார்பில் தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி தேவி தலைமை தாங்கினார். சுகாதார துணை இயக்குனர் செந்தில் ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஊர்வலத்தில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சுகாதாரத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.