உத்தரபிரதேச வாலிபர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

உத்தரபிரதேச வாலிபர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

Update: 2023-03-27 18:45 GMT

ஊட்டி

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மோஹித் நிரஞ்சன். இவர் மண் வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். உத்தரபிரதேசம் லலித்பூரில் இருந்து 30,000 கிமீ தூரம் அனைத்து மாநிலங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு சென்று மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இந்தநிலையில் நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மோஹித் நிரஞ்சன் சைக்கிளில் வந்தார். அவரை ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பரண்டு யசோதா வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து மோஹித் நிரஞ்சன் கூறியதாவது:- நான் மண் வளத்தை பாதுகாப்பதற்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நிகழ்ச்சிகளை நடத்துகிறேன். மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள் உடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். நான் எனது பயணத்தை கடந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரில் இருந்து தொடங்கினேன். தொடர்ந்து கன்னியாகுமரி, இமயமலை பகுதி, பாலைவனம், அரபிக்கடலை எல்லாம் கடந்து கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பயணத்தை முடிக்க உள்ளேன். இந்த பயணத்தை மக்கள் ஆதரித்து, மண் வளத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்