கரூரில், 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் திரும்ப அனுப்பும் பணி

கரூரில், 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் திரும்ப அனுப்பும் பணி நடந்து வருகிறது.;

Update: 2023-06-07 18:52 GMT

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டிருந்த 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்த பழைய வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூரு பி.எச்.இ.எல். நிறுவனத்திற்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட 15 ஆண்டுகளான வாக்குப்பதிவு எந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையம் திரும்ப பெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு திரும்ப அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது.

கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள பூ மாலை வணிக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டிருந்த 15 ஆண்டுகளுக்கு மேலான வாக்குப்பதிவு எந்திரங்களை லாரி மூலம் பெங்களூரு பி.எச்.இ.எல்.க்கு அனுப்பும் பணி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்