ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க அமைப்பு தின விழா
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க அமைப்பு தின விழா
பல்லடம்
பல்லடத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 35-வது அமைப்பு தினவிழா மற்றும் வட்டார மகளிர் மாநாடு நடைபெற்றது. விழாவிற்கு ஊரக வளர்ச்சித் துறை பல்லடம் வட்டார தலைவர் காந்திராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட தணிக்கையாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மாநில தலைவர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.