ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நேற்று கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். இதில் ரெட்ஸ்டார் சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு ராமச்சந்திரன், சுயஆட்சி இந்தியா தேசிய தலைவி கிறிஸ்டினா, தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.