இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-09 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தேரடி திடலில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட பொறுப்புச் செயலாளர் காளியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் வேலாயுதம், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாக குழு உறுப்பினர் விசாகன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கணபதி, அய்யனார், அந்தோணியம்மாள், கணேசன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் காமராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்