கடையம் யூனியன் கூட்டம்

கடையம் யூனியன் கூட்டம் நடந்தது.

Update: 2022-07-07 14:48 GMT

கடையம்:

கடையம் யூனியன் சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் யூனியன் தலைவர் செல்லம்மாள் முருகன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மகேஷ் மாயவன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர் அனைவரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வரையறுக்கப்படாத நிதி, வரையறுக்கப்பட்ட நிதி கவுன்சிலருக்கு ஒதுக்கப்பட்டது. சிறப்பு தீர்மானமாக கடையம் யூனியனுக்கு உட்பட்ட முதலியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பழுதடைந்த மற்றும் இடிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்களுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.43 லட்சத்தில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உள்ள ரூ.23 லட்சம் யூனியன் ஒன்றிய பொது நிதியிலிருந்து கவுன்சிலர்கள் அனைவரின் ஒப்புதலின்படி நேற்று வழங்கினார்கள்.

மேலும் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வாறுகால் கழிப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது என்றும், இந்த பணிகளை வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கீழக்கடையத்தில் நடைபெற்று வந்த சிமெண்டு சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்று ஒன்றிய கவுன்சிலர் புளி கணேசன் கூறினார். இந்த பணி விரைவாக தொடங்கப்பட்டு சரிசெய்யப்படும் என ஆணையாளர் பதில் கூறினார்.

தொடர்ந்து கூட்டம் முடிந்தும் மீண்டும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித் துறையின் வழிகாட்டுதலின்படி ஒன்றிய நிலை குழுக்களின் உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. இதில் கவுன்சிலர்களுக்கு சிறிது நேரம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனைவருக்கும் குழுக்களில் இடம் அளிக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்