காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

Update: 2023-02-03 12:19 GMT

காங்கயம்

காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நேற்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்தல், ஊராட்சிப் பகுதியில் தார் சாலை மேம்பாடு செய்தல் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் பேசியபோது: சிவன்மலை முருகன் கோவில் தைப்பூச தேர்த் திருவிழாவை முன்னிட்டு விழா முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்கள் வசதிக்காக சிவன்மலை முருகன் கோவில் கிரிவலப் பாதையில் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு சிவன்மலை அடிவாரப் பகுதியில் பக்தர்கள் வசதிக்காக 20 நடமாடும் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த சுகாதாரப் பணிக்கு என 60 தூய்மை பணியாளர்கள் பணியாற்றும் வகையில் சுகாதார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலா தேவி, ராகவேந்தரன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

-----

Tags:    

மேலும் செய்திகள்