ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

பூதலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-06-09 21:26 GMT

திருக்காட்டுப்பள்ளி;

பூதலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி ராஜா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு முகப்பு வளைவு ஒன்றிய பொது நிதியிலிருந்து அமைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர் கேசவமூர்த்தி கல்லணை பாதிரக்குடி புதூர் பகுதிகளில் தினமும் மின்தடை ஏற்படுகிறது.இது குறித்து மின்சார வாரிய அலுவலரிடம் கேட்டால் முறையாக பதில் சொல்வதில்லை. இந்த பகுதியில் மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். கூட்டத்தில் பேசிய பல உறுப்பினர்களும் பூதலூர் ஒன்றிய பகுதியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து பேசிய ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன் 15- வது நிதிக் குழு மாநிலத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் எந்தெந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாக கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்