அடையாளம் தெரியாத ஆண், பெண் பிணங்கள்

பாளையங்கோட்டையில் அடையாளம் தெரியாத ஆண், பெண் பிணங்கள் கிடந்தன.

Update: 2022-12-29 21:00 GMT

நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நேற்று முன்தினம் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பாளையங்கோட்டை கிராமம்-2 கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் பாளையங்கோட்டை ராம்பாப்புலர் அம்மா உணவகம் அருகே 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்