இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்
வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் விழுப்புரம் மாணவி திவ்யா முதலிடம் பெற்றார்.;
வடவள்ளி
வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் விழுப்புரம் மாணவி திவ்யா முதலிடம் பெற்றார்.
தரவரிசை பட்டியல்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கும் இந்த கல்வியாண்டில் ஒரே விண்ணப்பம் வழியாக இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிப்பு வெளி யிடப்பட்டது.
இதில் மொத்தம் 5,361 இடங்களை நிரப்புவதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை மதிப்பீடு செய்து இளநிலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தர வரிசைப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தரவரிசை பட்டி யலை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வெளியிட்டார்.
மாணவர் சேர்க்கை
இதைத்தொடர்ந்து துணைவேந்தர் கீதாலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் இணைந்து பொதுவான இணையதள விண்ணப்பம் மூலம் இளநிலை பட்டப்படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பில் 14 பாடப்பிரிவு, 3 பட்டயப்படிப்பு, டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தில் 6 இளநிலை பட்டப்படிப்பு பாடப்பிரிவு, 3 தொழில்முறை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
7.5 சதவீத இடஒதுக்கீடு
இந்த கல்வியாண்டில் 5,361 இடங்களுக்கு தகுதியான மாணவர்க ளிடம் இருந்து இணையதள வாயிலாக கடந்த 9-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் 41,434 பேர் விண்ணப்பித்தனர். அதில் 21,384 பெண்கள் உள்பட மொத்தம் 36,612 பேர் தரவரிசைக்கு தகுதியானவர்களாக கருதப்பட்டனர்.
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக் கீட்டில் 10,887 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அவர்கள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிக ளில் படித்ததற்கான எமிஸ் (EMIS) எண்கள் சரிபார்ப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த கல்வியாண்டில் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் 403 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த மாணவர்களின் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும். இளநிலை (மேதமை), தோட்டக்கலை (50 இடம்) ஆகிய பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
விளையாட்டு வீரர்கள்
முன்னாள் ராணுவ வீரர்களின் இடஒதுக்கீட்டில் 20 இடங்க ளுக்கு 309 பேர் விண்ணப்பித்து உள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீட்டில் 128 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் 790 விண் ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளது. அதில் 20 மாணவர்கள் சேர்க் கப்படுவார்கள். தொழில்முறை கல்வி பயின்ற மாணவர்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீட்டில் 242 பேர் சேர்க்கப்படுவார்கள்.
மாணவி திவ்யா முதலிடம்
தரவரிசை பட்டியலில் விழுப்புரம் மாணவி திவ்யா முதலிடம் பிடித்து உள்ளார். மதுரை மாணவர் ஸ்ரீராம் 2-வது இடம், சங்கரன்கோவில் மாணவி முத்துலட்சுமி 3-வது இடம், திருநெல்வேலி மாணவர் சங்கரன் 4-வது இடம், விழுப்புரம் மாணவி சோபனா 5-வது இடம் பிடித்தனர்
தமிழ்வழியில் பயில 9,997 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். வேளாண்மை சார்ந்த படிப்புகளில் பெண்கள் அதிக அளவு சேர்கின்றனர். தரவரிசை பட்டியல் தற்போது பொதுமக்களின் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
கலந்தாய்வு
அடுத்த மாதம் (ஜூலை) இறுதி வாரத்தில் கல்லூரிகள் திறக்கப்ப டும். அதற்கு முன்னதாக கலந்தாய்வு நடைபெறும். மாணவர் சேர்க்கை நேர்மையான முறையில் நடைபெறும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 ஆயிரம் விண்ணப்பம் அதிகமாக வந்துள்ளது.
ஜூலை மாதம் பட்டமளிப்பு விழாவிற்கு கவர்னரிடம் தேதி கேட்கப்பட்டு உள்ளது. அவர் தேதி கொடுத்ததும் பட்டமளிப்பு விழா நடைபெறும்
இவ்வாறு அவர் கூறினார்.