உடன்குடி பஜாரில் போக்குவரத்து போலீசாருக்கு நிழற்கூண்டு அமைக்க கோரிக்கை
உடன்குடி பஜாரில் போக்குவரத்து போலீசாருக்கு நிழற்கூண்டு அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி மெயின் பஜார் நான்கு ரோடுகள் சந்திப்பு முக்கில் வாகன நெரிசலை சமாளிப்பதற்காக போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போலீசார் வெயில் மற்றும் மழைக்காலங்களில் நிழற்கூண்டு வசதி இல்லாமல் பணியின் போது கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே போக்குவரத்து போலீசாருக்கு நிழற்கூண்டு அமைத்து தருவதுடன், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறையையும் அமைக்க வேண்டும் என போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.