தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில்பட்ஜெட் விளக்க கூட்டம்
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பட்ஜெட் விளக்க கூட்டம் நடந்தது.;
தூத்துக்குடி வணிகவியல் துறை சார்பில் நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டம் வ.உ.சி. கல்லூரியில் நடந்தது. கூட்டத்துக்கு கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு தலைமை தாங்கி பேசினார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் வே.சொர்ணகணேஷ் வரவேற்று பேசினார். ஆடிட்டர் ஏ.சக்கரவர்த்தி நிதிநிலை அறிக்கை குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் வணிகவியல் துறை மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் எம்.கந்தபிரியா நன்றி கூறினார்.