தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரையில்இயற்கை சீற்றங்கள் தணிய சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரையில் இயற்கை சீற்றங்கள் தணிய சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Update: 2023-04-23 18:45 GMT

உலகம் முழுவதும் இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பாற்ற வேண்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம் சார்பில் உலகம் முழுவதும் 13 நாடுகள், இந்தியாவின் 4 மாநிலங்கள் உட்பட மொத்தம் 186 இடங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒரே நேரத்தில் பேரண்ட பிரபஞ்ச இயற்கை வழிபாடு செய்தனர்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய துறைமுகம் கற்கரையில் நடந்த இயற்கை வழிபாட்டில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பஞ்ச தெய்வங்களான காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றை வேண்டி 108 குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். இயற்கை வழிபாட்டை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் முருகன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், கூட்டுறவு மொத்த பண்டகசாலை பொதுமேலாளர் கந்தசாமி, இளைஞர் அணி செயலாளர் செல்லத்துரை, வேள்விக்குழு செயலாளர் கிருஷ்ண நீலா, பிரச்சார குழு முத்தையா, திரு.வி.க நகர் சக்தி பீட துணைத்தலைவர் திருஞானம், பொருளாளர் அனிதா, தெர்மல் சக்தி பீட நிர்வாகிகள் சக்கம்மாள், ராஜி, புதுக்கோட்டை காசியம்மாள், வேப்பலோடை முனியசாமி, சித்த மருத்துவர் வேம்பு கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து.கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்