இயல்பு நிலைக்கு திரும்பிய தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் - பிற மாவட்டங்களுக்கு பேருந்து சேவை தொடக்கம்
வெள்ள நீர் முழுவதுமாக வடிந்த பிறகு பேருந்து மற்றும் ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக பேருந்து நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பேருந்து மற்றும் ரெயில் சேவைகள் இயக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் வெள்ள நீர் முழுவதுமாக வடிந்த பிறகு பேருந்து மற்றும் ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் 45% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், இன்று கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இன்று பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைவாக காணப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.