தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு கலை, இலக்கிய போட்டிகள்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு கலை, இலக்கிய போட்டிகள் நடந்தது.;

Update:2023-07-08 00:15 IST

விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை நிர்வாகமும், காமராஜ் கல்லூரி வரலாற்றுத் துறையும் இணைந்து, உலக போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கல்லூரியில் நேற்று நடத்தின. இந் நிகழ்ச்சியை முன்னிட்டு மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் போதை பொருள் தடுப்பு உறுதி மொழி ஏற்றனர்.

மேலும் போதைப்பொருள் ஒழிப்பதில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது. கட்டுரைப் போட்டியில், மாணவி ராமலட்சுமி முதல் பரிசையும், மாணவி ஏ. பாரதி 2-வது பரிசையும், மாணவி சு. ஆர்த்தி பாரதி 3-வது பரிசையும் பெற்றனர்.

பேச்சுப் போட்டியில் மாணவி அஜிதா முதல் பரிசையும், மாணவி ஜெசீனா 2-வது பரிசையும், மாணவி பால சரண்யா 3-வது பரிசையும் பெற்றனர். ஓவியப் போட்டியில் மாணவர் சூர்யா முதல் பரிசையும், மாணவர் கார்த்திக் 2-வது பரிசையும், மாணவி மகாலட்சுமி 3-வது பரிசையும் பெற்றனர்.

பரிசு

தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலால் பிரிவு உதவி ஆணையர் பி. செல்வநாயகம் தலைமை தாங்கி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மாணவர் நத்தீஷ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் பூங்கொடி, கோட்ட கலால் அலுவலர் தாமஸ் பயஸ் அருள், இன்ஸ்பெக்டர் பிரபாகரன், கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் ஆ. தேவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவி கங்காதேவி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்