தூத்துக்குடியில் கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர் சங்க ஆண்டுவிழா
தூத்துக்குடியில் கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர் சங்க ஆண்டுவிழா நடந்தது.;
தூத்துக்குடி ஏ.ஐ.டி.யு.சி கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்க 33-வது ஆண்டு விழா சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு சங்க தலைவர் ஞானசேகர் தலைமை தாங்கினார். பொருளாளர் முருகேசன், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் கணபதி சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் இந்திய வியாபார தொழிற்சங்கத்துக்கும் கட்டுக்கூலி மூடை சுமைத் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்துக்கும் இடையே கூலி உயர்வு சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கடந்த 2021-ல் 15 சதவீதம் கூலி உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு ஒப்பந்தத்தில் கூலி உயர்வை 40 சதவீதம் உயர்த்தி வழங்க இந்திய வியாபார தொழிற்சங்கம் ஆவணம் செய்ய வேண்டும். சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உயர்த்தி காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் லோகநாதன், கிருஷ்ணமூர்த்தி, பாண்டி, மாடசாமி, சுப்பிரமணியன், மாநகராட்சி கவுன்சிலர் தனலட்சுமி, உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்க உதவி தலைவர் ஜீவா நன்றி கூறினார்.