மார்பக புற்றுநோயை பெண்கள் சுயபரிசோதனை மூலம் தொடக்கத்திலேயே கண்டறிந்து தடுக்க முடியும் என்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார் தெரிவித்தார்.

மார்பக புற்றுநோயை பெண்கள் சுயபரிசோதனை மூலம் தொடக்கத்திலேயே கண்டறிந்து தடுக்க முடியும் என்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார் தெரிவித்தார்.;

Update:2023-10-14 00:15 IST

மார்பக புற்றுநோயை பெண்கள் சுயபரிசோதனை மூலம் தொடக்கத்திலேயே கண்டறிந்து தடுக்க முடியும் என்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார் தெரிவித்தார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தை 'பிங்க் அக்டோபர்' என்ற பெயரில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் மருந்தியல் துறை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆஸ்பத்திரி டீன் ஜி.சிவக்குமார் தலைமை தாங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, உலகளவில் ஏற்படும் புற்றுநோய்களில் பெண்களை தாக்கும் மார்பக புற்றுநோய் முதன்மையாக உள்ளது. இது தொடர்பாக பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் புற்றுநோய் விழிப்புணர்வு 'பிங்க்' மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும். மார்பக புற்றுநோயை பெண்கள் சுய பரிசோதனை மூலமே எளிதாக கண்டறிந்து தடுக்க முடியும். எனவே, பெண்கள் அடிக்கடி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இதை முன்னிட்டு அரசு செவிலியர் கல்லூரி மாணவியர் பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்கள், ரங்கோலிகளை வரைந்திருந்தனர். புற்றுநோய் சிகிச்சை பிரிவு முழுவதும் பிங்க் வண்ண பலூன்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் கவுரவிக்கப்பட்டனர். தங்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவர்கள் பகிர்ந்து கொண்டனர். ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் ஆர்.பத்மநாபன், துணை கண்காணிப்பாளர் பி.குமரன், மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவ அலுவலர் ஜே.சைலஸ் ஜெயமணி, அறுவை சிகிச்சை துறை தலைவர் ராகேஷ், மருந்தியல் துறை தலைவர் ராஜவேல் முருகன், புற்றுநோய் மருந்தியல் துறை உதவி பேராசிரியர் எஸ்.காந்திமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்