திமுக அரசை கண்டித்து அ.ம.மு.க. வரும் 5ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்.
சென்னை,
அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடமாட்டோம் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு சொல்லிவருவதால் குறுவைப் பயிர்கள் வாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைப் பற்றி அக்கறை இல்லாமல் தேர்தல் கூட்டணி மட்டுமே முக்கியம் என்று சுயநல போக்குடன் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மக்கள் விரோத தி.மு.க. அரசையும் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பெரியார் சிலை அருகில் வருகிற 5.9.2023 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். இவவாறு அதில் கூறப்பட்டுள்ளது.