முத்தரப்பு கலந்துரையாடல் கூட்டம்
நெல்லை சட்டக்கல்லூரியில் முத்தரப்பு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சமரச மையத்தின் உத்தரவின் பேரில் நெல்லை அனைத்து நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் மீடியேட்டர்களுக்கு இடையிலான முத்தரப்பு கலந்துரையாடல் கூட்டம் நெல்லை மாவட்ட சமரச மையம் மூலமாக அரசு சட்டக்கல்லூரியில் நடந்தது.
மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து சமரச மையத்தில் செயல்பாடுகள் குறித்தும், சமரச மையத்தில் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் புள்ளி விவரங்கள் குறித்தும் பேசினார் இதில் சென்னை உயர்நீதிமன்ற சமரச மையத்தின் மூத்த பயிற்சியாளர் வக்கீல் அருணாசலம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் காமராஜ் மற்றும் தென்காசி, சங்கரன்கோவில், அம்பை, வள்ளியூர், நாங்குநேரி, சிவகிரி, ஆலங்குளம், செங்கோட்டை, ராதாபுரம் ஆகிய 9 தாலுகாவின் வக்கீல் சங்க தலைவர் மற்றும் செயலாளர்கள் மற்றும் வக்கீல்கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட சட்டப்பணி ஆனைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன் செய்து இருந்தார்.