கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2023-09-06 20:40 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி தலைமையில் போலீசார் நேற்று களியல் வன சரக அலுவலகம் முன் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் சுமார் 4 டன் ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. அந்த ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரேஷன் அரிசியை டெம்போவோடு சேர்த்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற டெம்போ டிரைவரான தெள்ளாந்தி காமராஜர் நகரை சேர்ந்த மகராஜன் (வயது 29), கிளீனரான வினோத் பாபு (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது ரேஷன் அரிசியை சேம்ராஜ் என்பவர் கேரளாவை சேர்ந்த அன்வர் என்பவருக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சேம்ராஜ் மற்றும் அன்வரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்