கோவில்பட்டியில் போராட்டத்திற்கு முயன்றத.மா.கா.வினர் 6 பேர் கைது
கோவில்பட்டியில் போராட்டத்திற்கு முயன்ற த.மா.கா.வினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் உள்ள அரசு அலுவலக வளாக சாலையை சீரமைக்க வலியுறுத்தி நேற்று த.மா.கா.வினர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு துண்டு விரித்து படுத்து உறங்கும் போராட்டத்திற்கு ஊர்வலமாக வந்தனர். நகர தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமையில் போராட்டம் நடத்த வந்த 6 த.மா.கா.வினரை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.