திருச்சி கோட்ட ரெயில் நிலையங்களில் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள் வைக்க அனுமதி

திருச்சி கோட்ட ரெயில் நிலையங்களில் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-13 13:20 GMT

திருச்சி ரெயில்வே கோட்டத்தின் ரெயில் நிலையங்களில் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகளை இயக்குவதற்கு தெற்கு ரெயில்வே அனுமதி வழங்கியுள்ளது. ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டம் மத்தியஅரசால் அறிமுகப்படுத்தப்பட்டது, இது உள்ளூர் தயாரிப்புகளுக்கான சந்தையை பிற்படுத்தப்பட்ட சமூக பிரிவினருக்கு கூடுதல் வருமான வாய்ப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் மூலம், சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள், 15 நாட்களுக்கு குறைந்தபட்சமாக, ரூ.1000 கட்டணம் செலுத்தி ரெயில் நிலையங்களில் கடைகளை இயக்க அனுமதி வழங்கப்படும். இதில் கைவினை கலைஞர்கள் அல்லது நெசவாளர் அடையாள அட்டை வைத்திருப்பவருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். இதில் திருச்சி, ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் மணமேடு கைத்தறி பருத்தி பொருட்கள், தஞ்சை, திருவாரூர் மற்றும் மன்னார்குடி ரெயில் நிலையத்தில் தஞ்சாவூர் பொம்மைகள், மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ஆர்கானிக் மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்கள், கும்பகோணம் ரெயில் நிலையத்தில் திருபுவனம் பட்டு, நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தில் கடல் சிப்பி பொருட்கள், விழுப்புரம் ரெயில் நிலையத்தில் சிறுவந்தாடு பட்டுகள், புதுச்சேரி ரெயில் நிலையத்தில் டெரகோட்டா மற்றும் பேப்பியர் மேச்சே பொருட்கள், விருதாச்சலம் ரெயில் நிலையத்தில் டெர்ரகோட்டா மற்றும் செராமிக் கைவினைப்பொருட்கள், வேலூர் ரெயில் நிலையத்தில் தோல் பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்