திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.;

Update:2022-10-23 00:53 IST

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

விமான நிலையத்தில் கூட்டம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அங்கு இருந்து திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி உள்நாட்டு விமான சேவைகளாக ஐதராபாத், புதுடெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆம்னி பஸ் கட்டணத்தையும், விமான கட்டணத்தையும் ஒப்பிடுகையில் விமான கட்டணம் குறிப்பிட்ட அளவு மட்டுமே அதிகம் உள்ளது.

இதனால் பொதுமக்கள் உள்நாட்டு விமான சேவைகளை பயன்படுத்தும் நிலைக்கு வந்து விட்டனர். நாளை (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பயணிகள் பலர் உள்நாட்டு விமான சேவைகளை பயன்படுத்தினர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் கூட்டமும், அவர்களை வரவேற்க வந்த உறவினர்கள் கூட்டமும் அலைமோதியது.

ஏற்பாடு

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் பலர் தீபாவளிக்காக விமானம் மூலம் திருச்சி வந்தனர். இதனால் திருச்சி விமான நிலையம் களைகட்டியது. பயணிகளும், அவர்களை வரவேற்பதற்காக உறவினர்களும் திருச்சி விமான நிலையத்தில் குவிந்ததால் விமான நிலைய பகுதியில் உள்ளே வரும் வாகனங்கள் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உடனடியாக வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்