மார்ஷல் நேசமணி சிலைக்கு கலெக்டர், மேயர் மாலை அணிவித்து அஞ்சலி

மார்ஷல் நேசமணி சிலைக்கு கலெக்டர், மேயர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Update: 2022-06-01 15:26 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைவதற்காக நடந்த போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர் மார்ஷல் நேசமணி. அதனால் அவரை மாவட்ட மக்கள் குமரித்தந்தை என்று அழைக்கிறார்கள். அவரது நினைவாக நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

மார்ஷல் நேசமணியின் 54 -வது நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி வேப்பமூடு பகுதியில் உள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காலையில் நடந்தது.

இதற்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.நேசமணி சிலைக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.

இதில் நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜாண் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி (செய்தி) லெனின் பிரபு, மார்ஷல் நேசமணியின் உறவினர்கள் ரெஞ்சித் அப்பல்லோஸ், தயாபதி நளதம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்