திருச்செங்கோட்டில் மறைந்த டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கு அஞ்சலி

Update: 2023-07-10 18:45 GMT

திருச்செங்கோடு

மறைந்த கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவுக்கு திருச்செங்கோடு நகர காவல் துறை சார்பிலும், போக்குவரத்து காவலர்கள் சார்பிலும், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சார்பிலும் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வின்சன்ட், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவக்குமார், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி, நகர சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உள்ளிட்ட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்