மரக்கன்றுகள் நடும் பணி

‘வீட்டுக்கு ஒரு விருட்சம்’ திட்டத்தின் கீழ் பிள்ளையார்பட்டியில் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.;

Update:2022-07-24 01:54 IST

பிள்ளையார்பட்டி,

'வீட்டுக்கு ஒரு விருட்சம்' திட்டத்தின் கீழ் பிள்ளையார்பட்டியில் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

மரக்கன்று நடும் பணி

'வீட்டிற்கு ஒரு விருட்சம்' திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து வருகிறார்.அதன்படி தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சியில் உள்ள குணசீலன் நகரில் இந்த திட்டத்தில் மரக்கன்று நடும் பணி நடந்தது. இந்த பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

மாணவர்களுக்கு காசோலை

அதனைத்தொடர்ந்து நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பிள்ளையார்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட காசோலையை மாணவர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம், கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல் மற்றும் நிர்வாகிகள் டாக்டர் ராம் மனோகர், டாக்டர் சிங்காரவேலு, என்ஜினீயர் அருண்பாலாஜி, பள்ளி தலைமையாசிரியர் சாந்தார்க், உதவி தலைமையாசிரியர் சிவமணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சந்தானம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக அனைவரையும் பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் வரவேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்