கலெக்டர் அலுவலக வளாகத்தில் லிப்ட்டுக்குள் சிக்கியவரால் பரபரப்பு

கலெக்டர் அலுவலக வளாகத்தில் லிப்ட்டுக்குள் சிக்கியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-08 18:45 GMT

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிய அலுவலக கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த புதிய கட்டிடத்தில் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக 2 லிப்ட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேற்று பிற்பகலில் சென்னையை சேர்ந்த அயூப்கான் (வயது 48) என்பவர் அலுவலக பணி காரணமாக கலெக்டர் அலுவலகம் வந்தார். இவர் புதிய அலுவலக கட்டிட வளாகத்திற்கு சென்று லிப்டில் ஏறி மேல்மாடிக்கு செல்ல முயன்றார். உள்ளே சென்ற சில நொடிகளில் திடீரென்று லிப்ட் பழுதாகி நின்றது. இதை அறிந்த அங்கு நின்றவர்கள் கூச்சலிட்டனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் அங்கு வந்து லிப்ட் கதவை திறக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அதன் சாவி பொதுப்பணி துறையினரிடம் உள்ளது என்பதை அறிந்து அவர்களிடம் சென்று சாவியை வாங்கி வந்து திறந்து அயூப்கானை பத்திரமாக மீட்டனர். சுமார் 20 நிமிடங்கள் அவர் லிப்ட்டுக்குள் பரிதவித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

மின்சார தொழில்நுட்ப கோளாறு காரணமாக லிப்ட் பழுதானதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் இந்த லிப்ட் பழுதாகி நின்று அதன்பின் உடைத்து உள்ளே இருந்தவர்கள் வெளியே மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்