டிராக்டர்களில் மண் கடத்தல்; 4 பேர் கைது
பாவூர்சத்திரம் அருகே டிராக்டர்களில் மண் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளத்தில், மண் எடுக்க அரசு கொடுத்துள்ள அனுமதிச்சீட்டை முறைகேடாக பயன்படுத்தி டிராக்டர்களில், மண் கடத்திச் செல்வதாக ஆலங்குளம் தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குறும்பலாப்பேரியைச் சேர்ந்த அமல்ராஜ் (வயது 56), அம்பை அருகே மன்னார்கோவிலை சேர்ந்த முருகன் மகன் பிரகாஷ் (23), வெள்ளக்கால் ஊரை சேர்ந்த மாரிச்செல்வம் மகன் யோகேஷ் (20) மற்றும் சுடலை மகன் மணிகண்டன் (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.