போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல்

விருதுநகரில் போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-01-10 00:56 IST


விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த டவுண் பஸ் திருமங்கலத்தில் இருந்து புறப்பட வேண்டிய நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டு வந்த நிலையில் போக்குவரத்து கழக ஆய்வாளர் தங்கவேல் பஸ் நடத்துனர் பரமேஸ்வரனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்து நள்ளிரவில் விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு 50-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின்பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.


Tags:    

மேலும் செய்திகள்