போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-07-13 18:45 GMT

ராமநாதபுரத்தில் இருந்து புதுவலசைக்கு சென்ற டவுன் பஸ்சை வழிமறித்து சிலர் கண்டக்டரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் படுகாயமடைந்தார். இதற்கு முன்னதாக ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் மர்ம நபர்கள் தாக்கியதில் டிரைவர் ஒருவர் படுகாயமடைந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்று அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கண்டித்தும், தங்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமநாதபுரம் நகர் கிளையில் பணிபுரியும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றாதவரை பஸ்களை இயக்க முடியாது என்று கூறி பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ேமலும், பணிமனை வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதன்காரணமாக பணிமனையில் இருந்து வெளியில் செல்லக்கூடிய 57 பஸ்கள் செல்லாமல் பணிமனைக்குள் இருந்தன. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு பஸ்களை இயக்க சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்