போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-10 19:11 GMT

நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு கவர்னரின் செயல்பாடுகளை கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ஜோதி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஆர்.முருகன் மற்றும் நிர்வாகி காமராஜ், இணைச்செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்