போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கம் சார்பில், தேனி பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update:2023-10-07 00:15 IST

சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கம் சார்பில், தேனி பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு ஊதியக்குழு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 15-வது ஊதியக்குழு அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதேபோல், பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்