போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யூ.சி.யினர் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யூ.சி.யினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-06-23 18:43 GMT

கரூர் திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மண்டல தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் கவுரவ தலைவர் ராஜேந்திரன், மண்டல துணைதலைவர் ஹரீந்தரன், மண்டல பொதுச்செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை தொழிற் சங்கங்களோடு கலந்து பேசி இறுதிப்படுத்த வேண்டும்.

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 6 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்காமல் உள்ள டி.ஏ. உயர்வை வழங்க வேண்டும். மருத்துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெறும் நாளன்றே பண பலன்களையும் வழங்கிட வேண்டும். தொழிலாளர்கள் மீது பொதுமக்கள் புகார் என காரணம் கூறி மண்டலம் விட்டு மண்டலம் இடமாறுதல் செய்யும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்