தாசில்தார்கள் பணியிட மாற்றம்
தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் ஆலய நிலங்கள் தாசில்தார் கண்ணன், சிவகாசி கோட்ட கலால் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அகதிகள் பிரிவு தாசில்தார் ரவீந்திரன், விருதுநகர் ஆதிதிராவிடர் நல தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கலெக்டர் அலுவலக ஜி பிரிவு தலைமை உதவியாளர் வடிவேல், அகதிகள் பிரிவு தாசில்தாராகவும், சிவகாசி வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணியாற்றிய ஜெயபாண்டி, இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் அலுவலகத்தில் ஆலய நிலங்கள் தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.